குழந்தைக்கு தஞ்சம் மறுப்பு: ஆஸி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Image caption தஞ்சக் கோரிக்கை தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது.

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு, அகதித் தஞ்சம் பெறுவதற்கு உரிமையில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஃபெரோஸ் மையுதீன் எனும் அந்தக் குழந்தை பிறந்த சூழல் கருத்தில் எடுக்கப்பட்டாலும், சட்டவிரோதமாகவே கடல்வழியாக அவர் நாட்டுக்குள் வந்தார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பசஃபிக் தீவான நவ்ரூலுள்ள ஒரு தடுப்பு முகாமிலிருந்து பிரிஸ்பேனிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது தாய் மாற்றப்பட்ட பிறகு குழந்தை பிறந்தது.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்கும் கடற்படையினர்

அந்தக் குடும்பத்தினர் மியான்மார் என்றழைக்கப்படும் பர்மாவிலிருந்து வந்த ரோஹிஞ்சா முஸ்லிம்கள்.

இந்தத் தீர்ப்பானது, இப்படியான சூழலில் பிறந்த மேலும் சுமார் நூறு குழந்தைகளை பாதிக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்ததால், தஞ்சம் தொடர்பான தமது கொள்கையை அந்நாடு கடுமையாக்கியுள்ளது.