இணையத்தில் அடுத்தவர் பற்றி மோசமாக எழுதுவோருக்கு தண்டனை: பிரிட்டன் பரிசீலனை

இணையதளத்தில் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமான மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களை வெளியிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption இணையத்தில் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டுவது போன்ற துஷ்பிரயோகங்கள் அதிகம்

இப்போதுள்ள பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கமுடியும்.

இந்தக் குற்றத்துக்காக இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை அளிக்கப்படுகின்றது.

பிரபல இணைய துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றின் தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.