பதுளை நிலச்சரிவு மீட்புப் பணிகள் - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நூறு பேருக்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பல மீட்டர்கள் அளவுக்கு குவிந்துள்ள மண்ணைத் கனரக தோண்டும் வண்டிகளைக் கொண்டு நூற்றுக்கணக்கான துருப்பினர் தோண்டிவருகின்றனர்.

எத்தனை பேர் இந்த மண் குவியலில் சிக்கியிருப்பார்கள் என்பது இன்னும் தெளிவில்லாமல் இருந்துவருகிறது.

உயிரோடு யாரையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்துவருவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Image caption பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இப்பகுதியில் கடுமையாக மழைபெய்துவந்த சூழலில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அருகிலுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலைபார்த்துவந்த தொழிலாளிகளின் தகரக்கூரை வீடுகள் புதன்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் புதையுண்டு போயின.

இந்தச் செய்தி குறித்து மேலும்