பருவநிலை மாற்றம்: ஐநா நிபுணர் குழு புதிய எச்சரிக்கை

வெப்பவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நிவர்த்தி செய்ய முடியாத பாதிப்புகளை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும் ஆய்வறிக்கை ஒன்றை பருவநிலை மாற்றம் சம்பந்தமான ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயலே முக்கிய காரணம் என இந்த நாற்பது பக்க அறிக்கை கூறுகிறது.

புவியின் வெப்பம் ஆபத்தை உண்டாக்கும் அளவுகளில் அதிகரிப்பதை தடுக்க வேண்டுமாயின், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியோடு, உலகத்துக்கு தேவையான மின்சார மிட்டத்தட்ட முழுமையாகவே கரிம வெளியேற்றம் இல்லாத உற்பத்தி முறைகளிலிருந்து வரவேண்டும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

புவி வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை சமாளிக்க பெரும்பான்மை நாடுகள் தயாராகவே இல்லை என கோபன்ஹேகனில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது பேசிய ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறினார்.

பருவநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஏழை மக்களும் பலவீனமான சூழ்நிலையில் உள்ளவர்களுமே என்று கூறிய பான் கி மூன், ஆனால் பருவநிலை மாற்றங்களுக்கு அதிகம் பங்களித்தவர்கள் இவர்கள் அல்ல என தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான புதிய உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை எட்ட சர்வதேச நாடுகள் விவாதித்து வருகின்றன.

அடுத்ஹத ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுவிடும் என அவர்கள் நம்புகின்றனர்.