பாகிஸ்தான் குண்டு வெடிப்பு 50 பேர் பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு 50 பேர் பலி - காணொளி

இந்திய எல்லைக்கு மிக அருகாக பாகிஸ்தானில் ஒரு தற்கொலை தாக்குதலாளி குறைந்தபட்சம் 50 பேரையாவது கொன்றதாக பாகிஸ்தானிய போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 70 பேர் இதில் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரேயொரு எல்லைக்கடவையான ''வாகா'' எல்லை கடவையில் மாலையில் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வின் பின்னர் இந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த கொடி இறக்கும் நிகழ்வில் இரு நாட்டுப் படையினரும் கலந்து கொள்வார்கள்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் பலம் மிக்க தளமாக லாகூர் திகழும் நிலையில், இந்தச் சம்பவம் அதன் இதயப் பகுதியில் நடந்திருப்பது, அங்குள்ள அதிகாரிகளை கவலை கொள்ளச் செய்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இவை குறித்த காணொளி.