அன்வர் இப்ராஹிம் மீதான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும்

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'அன்வர் இப்ராஹிம் மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது'- ஆதரவாளர்கள்

மலேசியாவின் முன்னணி எதிர்க்கட்சி அரசியல்வாதியான அன்வர் இப்ராஹிமின் மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பின்னைய திகதி ஒன்றில் வழங்கவுள்ளதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவருடன் குதவழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக அன்வர் இப்ராஹிம் மீது அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவே அவர் மேன்முறையீடு செய்திருந்தார்.

2008-ம் ஆண்டில் தனது ஆண் உதவியாளருடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டி அன்வர் இப்ராஹிமுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கடந்த மார்ச்சில் அளிக்கப்பட்டது.

ஆனால், அன்வர் இப்ராஹிம் மீதான வழக்கு நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அன்வர் இப்ராஹிம் மீதான வழக்கு நடவடிக்கை மலேசியாவின் அரசியலில் கடந்த பல ஆண்டுகளாகவே முக்கிய விவகாரமாக மாறியுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் கூறுகின்றார்.