திருநங்கைகள் உடை: மலேசியத் தடை 'சட்டவிரோதமானது'

படத்தின் காப்புரிமை AFP
Image caption வெற்றி பெற்றதைக் கொண்டாடும் மலேசியத் திருநங்கைகள்

மலேசியாவில் திருநங்கைகள் மூவர், மாற்றினத்தவர்களைப் போல உடை அணிந்து கொள்ளும் உரிமையை நீதிமன்றத்தில் வென்றிருக்கிறார்கள்.

மலேசியாவின் நெக்ரி செம்பிலன் மாகாணத்தில் இஸ்லாமிய சட்டத்தின்கீழ் இவர்கள் பெண்கள் போல உடையணிவதோ அல்லது நடந்துகொள்வதோ தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த மாகாணத்தில் அமலில் உள்ள இந்தத் தடை மனித நேயமற்றது என்றும், இழிவாக்குவதாக இருக்கிறது என்றும் கூறி அந்த சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மூவரும் மாகாணத்தின் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டிருந்ததை கீழ் நீதிமன்றம் ஒன்று சரியானது என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்திருக்கிறது.