'தீவிரவாத இஸ்லாமிய அரசை' விமர்சித்தது நியாயமே : ஜகார்த்தா போஸ்ட்

இஸ்லாமியத் தீவிரவாதிகள் குறித்து விமர்சித்த தமது நடவடிக்கை சரியானதுதான் என ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகை வாதிட்டுள்ளது.

Image caption ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகை

உலகில் மிக அதிகமான அளவில் முஸ்லிம்கள் வாழும் இந்தோனீஷியாவிலிருந்து வெளியாகும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரை அரசு ஒரு அவதூறு வழக்கில் சேர்த்ததை அடுத்து, தமது நடவடிக்கையை ஜகார்த்தா போஸ்ட் நியாயப்படுத்தியுள்ளது.

அந்த கேலிச்சித்திரத்தில், தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசின் கொடியை ஒத்த ஒரு கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ''அல்லாவைத் தவிர வேறு கடவுள் கிடையாது'' என்ற வாசகமும், ஒரு மண்டை ஓடும், குறுக்காக இரு எலும்புகளும் வரையப்பட்டிருந்தன.

அந்த வாசகம் முஸ்லிம்களை காயப்படுத்துவதாக பார்க்கப்படுவதுடன், அந்தக் கேலிச்சித்திரம் மனதைப் புண்படுத்தும் ஒன்றாக சிலரால் பார்க்கப்படுகின்றது.

ஆனால், அந்த கேலிச்சித்திரம் ஒரு பத்திரிகையாளர் விமர்சனம் என்று ஜகார்த்தா போஸ்ட் கூறுகின்றது.

தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு, சிரியாவிலும், இராக்கிலும் கொடூரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.