"பாலியல் அடிமைகளாக யாசிடிக்கள்"- அதிர்ச்சியளிக்கும் புதுத் தகவல்கள்

இராக்கில் யாசிடி மதப்பிரிவுப் பெண்களை கைப்பற்றிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்றது குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image caption தப்பித்து வந்த யாசிடிப் பெண் ஒருவர்

அவர்கள் பிடியிலிருந்து தப்பித்த யாசிடிக்கள் அந்தத் தீவிரவாதிகளின் பிடியில் தாங்கள் அனுபவித்த கொடூரங்கள் குறித்து பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

அடிமைச் சந்தைகளில் பெண்களும், சிறுமிகளும் வெறும் 12 டாலர்களுக்கு வாங்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.

Image caption நடைபெற்றக் கொடூரங்களுக்கு சாட்சியாக உள்ளார் இந்தப் பெண்

அதில் சிலர் திரும்பினர் என்றும், அவர்கள் அடித்து காயப்படுத்தப்பட்டு மீண்டும் விற்கப்பட்டனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில் ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த ஒரு ஜிகாதி, ஐந்து யாசிடிகளைத் தமது வீட்டுக்கு கொண்டுசென்றத்தை தப்பித்து வந்தவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக வெளியேறிய யாசிடிக்கள்

யாசிடிக்கள் மற்றும் கிறிஸ்தவ பெண் அடிமைகளை மீது தங்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஐ எஸ் அமைப்பு தனது தீவரவாதிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

Image caption நேர்ந்த கொடுமைகள் குறித்து கதறும் யாசிடித் தாய் ஒருவர்

பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளதை தப்பிவந்தவர்கள் கூறுகிறார்கள்.

அந்தத் தீவிரவாதிகளிடம் சிக்கித் தவித்த ஒருவர், அவர்களின் கொடூரங்களிலிருந்து மீள்வதற்காக தனது மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார் என தப்பித்துவந்த ஒருவர் கூறுகிறார்.