"உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே"

  • 30 டிசம்பர் 2014

சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image caption தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர்

அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.

வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய மக்களே எனத் தெரியவந்துள்ளது.

Image caption இராக்கில் போரின் தாக்கம் தொடருகிறது

பிராந்தியங்கள் என்று பார்க்கும் போது ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அடுத்த ஆண்டு குறித்து ஒரு நம்பிக்கை அவர்களிடையே உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை மேற்கு ஐரோப்பாவே பிராந்திய அடிப்படையில் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் இருக்கும் இடமாகவும் அறியப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு குறித்து சாதகமான கருத்து மேற்கு ஐரோப்பிய மக்களிடம் இல்லை என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதிலும் கிரேக்கத்திலேயே மகவும் கூடுதலாக மகிழ்ச்சியற்றவர்கள் காணப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இதில் 64,000க்கும் அதிகமானவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.