மாலுமி இல்லாமல் 400 குடியேறிகளுடன் தத்தளிக்கும் கப்பல்

  • 2 ஜனவரி 2015

சுமார் 400 குடியேறிகளை ஏற்றியவாறு இத்தாலியின் தென்கிழக்கு கடற்கரையோரமாக கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சரக்கு கப்பல் ஒன்றை மீட்பதற்கான நடவடிக்கையை இத்தாலிய கடலோரக் காவற்படையினர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மாலுமி இல்லாமல் 400 குடியேறிகளுடன் தத்தளிக்கும் கப்பல்

சியாராலியோன் நாட்டு கொடியுடன் இருக்கும் ''எஷடீன்'' என பெயரிடப்பட்ட இந்தக் கப்பலில் மாலுமிகள் எவரும் கிடையாது.

காலநிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறும் இத்தாலிய வான்படையினர், ஹெலிக்கொப்டர்கள் மூலம் ஆட்களை கப்பலில் இறக்கி அதனை கட்டுப்படுத்த தாம் முயற்சிப்பதாக கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய எல்லைப் படையின் ஒரு அங்கமான ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த படகு ஒன்றும் உதவ முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

மாலுமிகள் எவரும் இல்லாமல், 800 குடியேறிகளுடன் வந்த இன்னுமொரு கப்பல், தெற்கு இத்தாலியில், கலிபோலியில் தரை தட்டிய மறுதினம் இந்தக் கப்பல் குறித்த செய்தி வந்திருக்கிறது.