வங்கதேசம்: எதிர்க்கட்சி ஆதரவு தொலைக்காட்சி தலைவர் கைது

  • 6 ஜனவரி 2015
வங்கதேசத்தில் அரசியல் மோதல் அதிகரித்திருக்கிறது படத்தின் காப்புரிமை AFP
Image caption வங்கதேசத்தில் அரசியல் மோதல் அதிகரித்திருக்கிறது

வங்கதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவின் மகனின் பேச்சை தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெரியவில்லை என்று புகார்கள் வந்திருக்கின்றன.

இந்த குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் ஆபாச தடுப்புச்சட்டப்பிரிவுகளின் கீழான வழக்கு தொடர்பிலேயே அந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுகிறது.

ஆனால் காவல்துறையின் இந்த குற்றச்சாட்டு திசை திருப்பும் நடவடிக்கை என்று கூறிய தனியார் தொலைக்காட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி, எதிர்க்கட்சித்தலைவரின் மகனுடைய உரையை ஒளிபரப்பியதாலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த வங்கதேச பொதுத் தேர்தலின் அண்டு நிறைவை ஒட்டி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆதரவாளர்களுக்கும் பிரதான எதிர்கடியான வங்கதேசத்தின் தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் அதிகரித்து வந்திருக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமைமுதல் நாட்டின் பிரதான சாலைகள் அனைத்திலும் சாலைமறியலில் ஈடுபடுமாறு கலிதா ஜியா தமது கட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுக்த்திருக்கிறார்.