பாக்.: மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டவர் சுட்டுக்கொலை

  • 8 ஜனவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன (கோப்புப் படம்)

பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நபர் ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சில நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே, டக்ஸிலா என்ற நகரில் வசித்துவந்த அபித் மெஹ்மூத் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தன்னை இறைதூதர் என்று அழைத்துக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

புத்தி சுவாதீனமற்றவர் என்று மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து, அவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.

இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது தெளிவில்லை. எனினும் பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் கொலைசெய்யப்படும் ஆபத்து உள்ளது.

பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றத்திற்கு, மரண தண்டனை உட்பட மிகக் கடுமையான தண்டனை அளிக்கக்கூடிய கடுமையான சட்டம் நடைமுறையில் உள்ளது.