மீண்டும் முகமது நபி சித்திரத்துடன் "ஷார்லி எப்டோ" இதழின் புதிய பதிப்பு

படத்தின் காப்புரிமை AP
Image caption ஷார்லி எப்டோ இதழின் புதிய பதிப்பிலும் முகமது நபியின் சித்திரம்

தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் "ஷார்லி எப்டோ"வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி, "நான் ஷார்லி" என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும்.

இந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், "எல்லாம் மன்னிக்கப்பட்டது" என்ற வாசகங்களும் இருக்கும்.

இந்த அட்டையுடன் கூடிய புதிய இதழ் ஏற்கனவே பிரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.

இந்த இதழின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் , அதன் ஊழியர்களைப் பணிய வைக்காது என்று , அந்த இதழின் செய்தியாளர், ஜினெப் எல் ரசூயி கூறினார்.

புதன்கிழமை பதிப்பின் மூன்று மிலியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக இந்த வார இதழ் வாரத்துக்கு 60,000 பிரதிகளே விற்கிறது.