வங்கதேசம்: அரசியல் கொந்தளிப்பால் பொருளாதாரம் பாதிக்கிறது

வங்கதேசம்: அரசியல் கொந்தளிப்பால் பொருளாதாரம் பாதிக்கிறது

வங்கதேசத்தில் இவ்வாண்டின் துவக்கத்தோடு ஆரம்பித்த அரசியல் கொந்தளிப்பிற்கு பின்னர், 56 மில்லியன் டாலர்கள் நஷ்டத்தை தாம் கண்டுள்ளதாக அந்நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்துறை கூறுகிறது.

உலகின் மிகப் பெரிய ஆடை ஏற்றுமதியாளரான வங்கதேசத்தின் வர்த்தகத் தலைவர்களுக்கு, இது கவலையைத் தந்துள்ளது.