நைஜீரியா: போக்கோ ஹராம் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு

  • 23 ஜனவரி 2015
Image caption 'பாகா நகரை கைப்பற்றிய போக்கோ ஹராம் பெண்களை பிடித்துவைத்துள்ளது'

நைஜீரியாவில் பாகா நகரை கைப்பற்றிய போக்கோ ஹராம் ஆயுததாரிகளிடமிருந்து தப்பிவந்துள்ள பெண் ஒருவர், ஜிஹாதிகள் பெண்களை பிடித்துவைத்திருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

பெண்களை பிடித்துச் சென்று கட்டடம் ஒன்றில் வைத்துள்ள ஆயுததாரிகள், இரவு நேரங்களில் அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிவருவதாகவும் அங்கு பிடிபட்டிருந்த நிலையில் தப்பிவந்துள்ள அந்தப் பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்களின் சடலங்கள் வீதிகளில் உருக்குலைந்துவருவதாகவும் அந்தப் பெண் கூறினார்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக, நைஜீரியாவின் வடகிழக்கே நிலைகொண்டிருந்த இராணுவத்தை தோற்கடித்து போக்கோ ஹராம் ஆயுதக்குழுவினர் பாகா நகரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.