அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'தமிழர் ஒருவர் உட்பட இருவருக்கு மரண தண்டனை வேண்டாம்'

  • 17 பிப்ரவரி 2015

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு கைதிகளை ஒரு தீவுச் சிறையில் அடைப்பதற்கான தமது திட்டத்தை இந்தோனேசியா பின்போட்டுள்ளது.

மரண தண்டனைக்கு முன்னதாக அந்தக் கைதிகளுடன் தாம் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்தோனேசிய அரச வழக்கறியர்கள் கூறியுள்ளனர்.

போதை மருந்து கடத்தலுக்காக மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் அவர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்களும் கோரியிருந்தனர்.

அண்ட்ரூ ஷான் மற்றும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரணதண்டனை வழங்க வேண்டாம் என அவர்கள் கோரியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டில் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

போதை மருந்து கடத்தலை தடுக்கும் நோக்கில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உரிமையை இந்தோனேசியா வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கச் சென்றது குறித்த காணொளி.