வங்கதேச போர்க்குற்ற விசாரணையில், இஸ்லாமியவாதக் கட்சியின் தலைவருக்கு மரண தண்டனை

  • 18 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை AFP
Image caption மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்துஸ் சுப்ஹான்

வங்கதேசத்தில் சுதந்திர போர் காலப்பகுதியான, 1970களில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த , மிகப் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியொன்றின் மூத்த தலைவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜமாத்-இ- இஸ்லாமி என்ற கட்சியின், மூத்த உறுப்பினரான அப்துஸ் சுபஹான் என்ற 79 வயதுடைய இவர் , கொலை, இனப்படுகொலை மற்றும் சித்ரவதை போன்ற ஆறு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கிக்கொண்டிருந்தபோது, அரச எதிர்ப்பு ஆர்வலர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் வீசப்பட்ட மூன்று மாலடோவ் காக்டெயில் குண்டுகள் மத்திய டாக்காவில் அமைந்துள்ள இந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வெடித்தன.

இந்த வழக்கில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அப்துஸ் சுபஹானின் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.