கறுப்புப் பணம் : சுவிஸ் எச்.எஸ்.பி.சி துணை நிறுவனத்தில் சோதனை

  • 18 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை EPA
Image caption கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி: எச்.எஸ்.பி.சி துணை நிறுவனத்தில் சோதனை

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நிதி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, எச்.எஸ்.பி.சி.யின் துணை நிறுவனமொன்றின் அலுவலகத்தில், சுவிட்சர்லார்ந்திதுள்ள விசாரணையாளர்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

தனது செல்வந்த வாடிக்கையாளர்கள், வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க அந்த வங்கி உதவியதாக, அண்மையில் வெளிவந்த கசியவிடப்பட்ட கோப்புகள் இந்த விசாரணைக்கு தூண்டியதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையில் சுவிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருப்பதாக எச்.எஸ்.பி.சி தெரிவித்துள்ளது.

இந்த மோசடி சம்பவங்களை, 'கடந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகள்' என தான் அழைத்ததற்காக எச்.எஸ்.பி.சி.யின் தலைமை அதிகாரி ஸ்டூவர்ட் கல்லிவர் கடந்த வாரம் மன்னிப்புக்கோரியதோடு, சுவிஸ் தனியார் வங்கியின் செயற்பாடுகள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்