ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் - காணொளி

  • 20 பிப்ரவரி 2015

ஆஸ்திரேலியாவில் கடுமையான இரு புயல்கள் தாக்கியுள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் சேதமானதுடன், கரையோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

வெப்பமண்டல புயலான மார்சியா, குயின்ஸ்லாந்தின் கரையோரமாக யெப்பொன் மற்றும் செயிண்ட். லாரண்ஸ் ஆகிய இடங்களுக்கு இடையே வெள்ளியன்று காலையில் தாக்கியுள்ளது.

போதுமான முன்னெச்சரிக்கை இன்றி வந்த அந்தப் புயல், 5 தர சூறைக் காற்றாக இருந்தாலும் பின்னர் அது தரம் 2 ஆக தரமிறக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடுமையான அலைகள் மற்றும் மழை ஆகியவை மிரட்டியிருக்கின்றன.

பிறிதாக இன்னுமொரு வெப்பமண்டல புயலான ''லாம்'' வடக்கு பிராந்தியத்தின் பிந்தங்கிய பகுதிகளை தாக்கியுள்ளது.

மார்சியா மணிக்கு 110 முதல் 155 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளது.

சனிக்கிழமை காலைதான் அது தணியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை குறித்த காணொளி.