ஜப்பானிய ரெட் ஆர்மி குழுவின் முன்னாள் உறுப்பினர் கைது

  • 20 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை NASA
Image caption அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் சுட்டோமு கைதாகியுள்ளார்

ஜப்பானில் 1970 மற்றும் 80-களில் விமானக் கடத்தல் உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்திய ரெட் ஆர்மி குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஜப்பானிய காவல்துறை கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் 30 ஆண்டுகால சிறைத் தண்டனையின் ஒரு பகுதியை முடித்த (Tsutomu Shirosaki) சுட்டோமு ஷிரொசாக்கி-யை அமெரிக்கா நாடு கடத்தியிருந்தது.

ஜப்பானிய நறிட்டா விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இவர் கைதானார்.

1986 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் ஜப்பானிய தூதுவராலயங்கள் மீது மோட்டார் தாக்குதலை மேற்கொண்ட குற்றத்தின் கீழ் இவர் தண்டிக்கப் பட்டிருந்தார்.

உலகப் புரட்சிக்காக தம்மை அர்ப்பணிக்கும் நோக்கில் உருவான ரெட் ஆர்மி அதி தீவிர இடதுசாரி அமைப்பாகும்.

இதன் செயற்பாடுகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.