ஆப்கானிஸ்தான்: வங்கியைக் கொள்ளையடித்த அதன் பணியாளர்கள்

  • 21 பிப்ரவரி 2015
Image caption பாகிஸ்தான் எல்லையூடாக கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளதாக நம்பப்படுகின்றது

தெற்கு ஆப்கானிஸ்தானில் வங்கி ஒன்றை, அந்த வங்கியின் பணியாளர்களே கொள்ளையடித்துள்ளனர்.

சுமார் 14 லட்சம் டாலர் பெறுமதியான பணத்தை இவர்கள் கொள்ளையடித்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த வங்கியில் 9 ஆண்டுகளாக பணியாற்றிவந்துள்ள மூத்த ஊழியர் ஒருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கன் மத்திய வங்கியின் தென்-மேற்கு பிராந்திய இயக்குநர் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

அதே வங்கியில் பணியாற்றியுள்ள அவரது மகனும் மருமகனும் இந்தக் கொள்ளைக்காக அவருக்கு உதவியுள்ளனர்.

அண்டையில் பாகிஸ்தான் எல்லையூடாக இவர்கள் தப்பிச்சென்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.