ராபர்ட் முகாபே 91: பலியிடப்படும் யானைகளும் சிங்கமும்

  • 21 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption முகாபே-வின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் யானைகளும் எருமைகளும் மறிமான்களும் சிங்கம் ஒன்றும் பலியிடப்படவுள்ளன

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் 91-வது பிறந்தநாள் இன்று.

உலக மிகவும் மூத்த அரச தலைவரான முகாபே, 35 ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தில் உள்ளார்.

இன்னும் ஒருவாரத்தில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே எல்லையில் உள்ள விக்டோரியா அருவி அருகே, மிகவும் ஆடம்பரமான கொல்ஃப் மைதானம் ஒன்றில் பெரும் கொண்டாட்டம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் செலவில் இந்த கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.

யானைகளும் எருமைகளும் மறிமான்களும் சிங்கம் ஒன்றும் பலியிடப்படவுள்ள இந்த திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கொண்டாட்டங்களுக்கு பொதுமக்களே பணம் செலவிடுவார்கள் என்று அரச ஊடகங்கள் கூறுகின்றன.

உலகில் வறிய நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே என்பது குறிப்பிடத்தக்கது.