வங்கதேசம்: படகு விபத்தில் 15 பேர் பலி, பலரைக் காணவில்லை

  • 22 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை focus bangla
Image caption பத்மா ஆற்றில் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகின்றன ( கோப்புப் படம்)

வங்கதேசத்தில் பயணிகள் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்குழந்தை ஒன்று உட்பட குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டாக்கா அருகே, பத்மா ஆற்றில் சரக்குக் கப்பலொன்று மோதியதிலேயே இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

இந்த படகில் 90 பேர் இருந்துள்ளனர் என்று கூறுகின்ற பொலிஸார், உயிரிழந்தோர் தொகை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

40 பேர் வரையில் காப்பாற்றப்பட்டோ அல்லது நீந்தியோ உயிர் தப்பியுள்ளனர்.

கடற்சேவை பொலிஸார், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து மூழ்கிய படகை மீட்க முயன்றுவருகின்றனர்.

சரக்கு கப்பலின் கேப்டனும் அவரது உதவியாளரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.