வங்கதேசத்தில் நாத்திக கொள்கையுடைய வலைப்பூ எழுத்தாளர் வெட்டிக் கொலை

  • 27 பிப்ரவரி 2015
கொல்லப்பட்ட அவிஜித் ராய் படத்தின் காப்புரிமை AVIJIT ROY FACEBOOK
Image caption கொல்லப்பட்ட அவிஜித் ராய்

தனது இறைமறுப்பு கருத்துகளுக்காக பரவலாக அறியப்பட்டிருந்த வங்கதேசப் பூர்வீகம் கொண்ட அமெரிக்க வலைப்பூ எழுத்தாளர் ஒருவர் தாக்கா சென்றிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த அவிஜித் ராய் புத்தகக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் வங்கதேசத் தலைநகர் சென்றிருந்தார்.

மத நிராகரிப்பு, அறிவியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கட்டுரைகளை எழுதியதற்காக இவருக்கு மிரட்டல்கள் வந்திருந்தன.

இவரது கருத்துகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என விமர்சிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கொலையை விசாரித்துவருவதாகவும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AP