'இஸ்லாமிய மயமாதலுக்கு' எதிரான குழு பிரிட்டனில் பேரணி

படத்தின் காப்புரிமை MORGAN MEAKER
Image caption தீவிர வலதுசாரிக் குழுக்களின் ஆதரவு Pegida-வுக்கு உள்ளது

'ஐரோப்பா இஸ்லாமிய மயமாதலை' எதிர்ப்பதாகக் கூறுகின்ற குழுவொன்று வடக்கு இங்கிலாந்தில் நியூகாஸல் நகரில் ஏற்பாடு செய்துள்ள பேரணியொன்றில் சுமார் 400 பேர் வரையில் கலந்துகொண்டுள்ளனர்.

மேற்குலகம் இஸ்லாமிய மயமாகின்றமைக்கு எதிரான மண்பற்று கொண்ட ஐரோப்பியர்கள் என்ற (Pegida) ஜெர்மனிய குழுவின் பிரட்டிஷ் கிளை பிரிட்டனில் நடத்துகின்ற முதலாவது பேரணி இதுவே.

ஜெர்மனியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இந்தக் குழுவின் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நியூகாஸல் பேரணிக்காக பெருமளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனிடையே, இந்த பேரணிக்கு எதிரான இன்னொரு பேரணியும் நியூகாஸல் நகரில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் சுமார் 1500 பேர் கலந்துகொண்டிருந்தனர்.