புயலால் அழிந்த வனுவாட்டுவுக்கு உதவிகள் விரைகின்றன
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புயலால் அழிந்த வனுவாட்டுவுக்கு உதவிகள் விரைகின்றன - காணொளி

புயல் தாக்கி பேரழிவிற்கு உள்ளாகிய பசுபிக் நாடான வனுவாட்டுவிற்கு அவசர நிவாரண உதவி வழங்கும் சர்வதேச நாடுகளின் பட்டியலில் சீனா புதிதாக இணைந்துள்ளது.

சீனாவில் உள்ள செஞ்சிலுவை அமைப்பு ஒரு இலட்சம் டாலர்களை உதவியாக ஏற்கனவே வழங்கியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சீனாவின் அனுதாபங்களை தெரிவித்த பேச்சாளர், வனவாட்டுவின் நிலமை குறித்து சீனா நெருக்கமாக அவதானித்து வருவதாக கூறினார்.

வனவாட்டுவின் அதிபர் பால்ட்வின் லொன்ஸ்டேல் உலக நாடுகளின் உதவியைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வான் வழியாக தமது நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிவு ஏற்பட்டு நான்காவது நாளாகியும் தற்காலிக குடியிருப்பின்றி அவதியுறுகின்றனர்.

வனுவாட்டுக்கான நிவாரண உதவிகள் மற்றும் அங்குள்ள் அழிவுகளை காண்பிக்கும் பிபிசியின் காணொளி.