உலகின் வட பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் வட பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம் - காணொளி

  • 20 மார்ச் 2015

உலகின் வடபகுதியை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்கள் இன்று சூரிய கிரகணத்தை பார்த்தார்கள்.

நோர்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வல்பார்ட் முதல் வடக்கு அட்லாண்டிக்கின் பாரோ தீவுவரை சந்திரனின் நிழல் சூரியனில் ஒரு வில் போன்ற வளைவை ஏற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

ஸ்வால்பார்ட்டில் தெளிவான நீல வானம் சூரியன் மறைந்ததால் இருள் சூழ்ந்துகொண்டது.

ஏனைய இடங்களில் கொஞ்சம் மழை மேகம் சூழ்ந்ததால் அவ்வளவாக கிரகணத்தை பார்க்க முடியவில்லை.

இங்கு பிரிட்டனிலும் பல இடங்களில் கிரகணத்தை முழுமையாக மக்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.