'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல்'

மத்தியதரைக்கடலின் ஒரு பகுதியானது பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல்
படக்குறிப்பு,

'பிளாஸ்டிக் குப்பை வலயமாக மாறும் மத்திய தரைக் கடல்

ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள், மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் மிதப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், பைகள் மற்றும் பாட்டில்களே இப்படி மிதப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் ஒன்று திரண்டு, உலக கடல் வளத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவான கடற் பிரதேசமான மத்தியதரைக்கடல் பகுதியை மிகப்பெரிய அளவில் மாசடையச் செய்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சிப்பிகளுக்குள்ளும் பிளாஸ்டிக்

அந்தக் கடலில் வாழ்கின்ற மீன்கள், பறவைகள், ஆமைகள் மற்றும் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்தும், பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக வட ஐரோப்பிய கரையோரங்களில் வளர்ந்த சிப்பி வகை உயிரினங்களின் வயிற்றிலும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காண்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய தரைக்கடலின் பௌதீக செழிப்பையும், அதன் பொருளாதாரம் சார்ந்த முக்கியத்துவத்தையும், இந்த பிளாஸ்டிக் கழிவுககள் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஸ்பெய்ன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டாகவே, பிளாஸ்டிக் பரவலாக பெருமளவில் பாவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அது நிலத்தில் மட்டுமல்லாது கடல் வளத்தையும் மாசுபடுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் மேலாண்மை உக்திகளுக்கான அவசர தேவையும் எழுந்துள்ளது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல், வட மற்றும் தென் அட்லான்டிக் கடல், வட மற்றும் தென் பசுபிக் கடல், ஆகியவற்றிற்கு இடையே தொடர்ந்து நடக்கும் கடல் நீரோட்ட சுழற்சியில் எந்த அளவுக்கு இந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்திருக்கிறதோ அதற்கு சமாந்திரமான அளவுக்கு மத்திய தரைக் கடலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, பெருந்தொகையான பிளாஸ்டிக் குப்பைகள், வங்காளவிரிகுடா, தென் சீனக் கடல், மற்றும் ஆர்க்ட்டிக் பெருங்கடலில் இருக்கும் பேரன்ட்ஸ் கடலிலும் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் 80 வீதத்திற்கும் அதிகமானவை ஐந்து மில்லிமீட்டருக்கும் சிறிய அளவிலானவை என சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆய்வறிக்கை, இந்த பிரதேசத்தில் குவிந்திருக்கும் இவ்வளவு பெரிய பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து ஆய்வாளர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.