சீன ஆட்சியை எதிர்த்து திபெத்திய பிக்குணி தன்னைத்தானே எரித்துக்கொண்டு மாண்டார்

சீன ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆர்ப்பாட்டத்தின்போது திபெத்திய பிக்குணி ஒருவர், உயிருடன் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு உயிர்விட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சீன ஆட்சிக்கு எதிராக திபெத்தியர்கள் செய்யும் ஒரு ஆர்ப்பாட்டம்

திபெத்தின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள புத்த மடம் ஒன்றின் வெளியே, தன்னைத்தானே தீயிட்டுக் கொண்ட அவர், புலம்பெயர்ந்து வாழும் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை நாடு திரும்புமாறு அழைத்தவாறே தீயிட்டுக் கொண்டதாக திபெத்திய உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் தீயை அணைத்துவிட்டு, அவரது உடலை எடுத்துச் சென்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சீனாவில், அண்மைய ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான திபெத்தியர்கள், சமய மற்றும் கலாச்சார அடக்குமுறை என தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் தம்மைத்தாமே தீயிட்டுக் கொளுத்திக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன.