'ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை'

  • 12 ஏப்ரல் 2015

ஒட்டமன் துருக்கிய ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் பகிரங்கமாக விபரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆர்மீனிய கத்தோலிக்கருடன் பாப்பரசர்

அந்தப் படுகொலையின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பூசை வழிபாடு ஒன்றில் உரையாற்றிய பாப்பரசர், ''நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்கு சமனாகும்'' என்று கூறினார்.

இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவத்தை பாப்பரசர் இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்தது.

முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று அது கூறியது.

ஒட்டமன் படைகளால், திட்டமிட்ட வகையில், தமது மக்கள் 15 லட்சம் பேர்வரை கொல்லப்பட்டதாக ஆர்மீனியர்கள் கூறுகின்றனர்.