தலாய் லாமா மீது சீனா மீண்டும் கடும் விமர்சனம்

திபேத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா மீது சீனா மீண்டும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption திபேத் மீதான சீன அரசின் எண்ணம் மாறும் என தலாய் லாமா முன்னர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்

வன்முறையை பயன்படுத்தி, திபேத்துக்கு விடுதலைப் பெற்றுத்தர அவர் முயல்கிறார் என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள திபேத் குறித்த ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ள சீனா, தற்போது நிலவும் சூழலில், நாடு கடந்து வெளியே வாழும் துறவியான தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அடிப்படை தேவைகள் ஏதுமில்லை என்று கூறியுள்ளது.

திபேத்துக்கு கூடுதலான சுயாட்சி வேண்டும் என்று நீண்டகாலமாக தலாய் லாமா வலியுறுத்தி வருகிறார்.

அதேவேளை சீனாவின் தற்போதைய அதிபரான ஷி ஜின் பிங், திபேத்தியர்களுடான உறவு தொடர்பில் புதிய அணுகுமுறையை கையாள்வார் என்றும் நம்பிகை வெளியிட்டிருந்தார்.

சீன அரசு இப்போது வெளியிட்டுள்ள கொள்கை விளக்க அறிக்கையை பார்க்கும்போது தலாய் லாமா மற்றும் திபேத் மீதான அரசின் நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்பது தெரிகிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.