மயூரன் உட்பட இரு ஆஸ்திரேலிய பிரஜைகளை மன்னிக்குமாறு மீண்டும் கோரிக்கை

  • 27 ஏப்ரல் 2015

மயூரன் சுகுமாரன் உட்பட அடுத்த சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் இரு ஆஸ்திரேலிய பிரஜைகளுக்கும் மன்னிப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர், டொனி அபொட் அவர்கள் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அண்ட்ரூ ஷான் மற்றும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த மயூரன் சுகுமாரன்

அண்ட்ரூ ஷான் மற்றும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த மயூரன் சுகுமாரன் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை காலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மரண தண்டனையை எதிர்நோக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு மனித நேய அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு அந்த நாட்டு அதிபரும், இந்தோனேசிய அதிபரை கோரியுள்ளார்.

இந்த இரு தலைவர்களும் ஒரு பிராந்திய மாநாட்டுக்காக மலேசியாவில் உள்ளனர்.