இந்தோனேசியா: இறுதி விடை கொடுத்த உறவினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனேசியா: இறுதி விடை கொடுத்த உறவினர் - காணொளி

  • 28 ஏப்ரல் 2015

போதை மருந்து கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் 9 பேருக்கும் அவர்களது உறவினர்கள் இறுதி விடை கொடுத்தனர்.

இவர்களில் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த மயூரன் சுகுமாரனும் அடங்குகிறார்.

அந்த கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வெற்று பிரேதப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.

புதன்கிழமை திகதியிடப்பட்ட, கைதிகளின் பெயர்களுடனான சிலுவைகளும் அங்கு வைக்கப்பட்டிருந்ததை படங்கள் காண்பித்தன.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்த 9 பேரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்குவதில் இந்தோனேசியா விடாப்பிடியாக இருக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.