சவுதியில் 93 இஸ்லாமிய அரசு "தீவிரவாதிகள்" கைது

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 93 பேரை கைது செய்திருப்பதாக சவூதி தெரிவித்துள்ளது
Image caption இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 93 பேரை கைது செய்திருப்பதாக சவூதி தெரிவித்துள்ளது

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் என சந்தேகிகத்தின் பேரில் தொண்ணூறுக்கும் அதிகமானோரை தாம் கைது செய்துள்ளதாகவும், அதில் அனேகமானோர் சவுதி பிரஜைகள் எனவும், சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உட்பட, பல்வேறு இலக்குகளை தற்கொலைத் தாக்குதல் மூலம் தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என்று சவுதி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குழுவினர் மத்திய பிராந்தியமான காசிம் பிராந்தியத்தின் தொலைதூர இடங்களை தளமாக கொண்டு செயற்பட்டவர்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், மற்றும் அவர்களுடன் இணைந்து சண்டையிடச் செல்வோருக்கு கடுமையான தண்டனைகளை, சவுதி அரேபியா கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னர், சவுதி அரேபியாவினுள் அல் கயீதாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்க முன்னெடுத்த தொடர் பிரச்சாரத்தை, சவுதி அரேபியா நசுக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.