வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்

  • 30 ஏப்ரல் 2015

வியட்நாம் போரின்போது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது என வியட்நாமின் பிரதமர் வியன் தன் ஷோங் கூறியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அந்தப் போர் முடிவடைந்து நாற்பது ஆண்டுகள் ஆவதை குறிக்கும் நினைவு நிகழ்வின்போது ஆற்றிய உரையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

வியட்நாம் மக்களுக்கு அந்தப் போரின்போது அமெரிக்கா கணக்கிட முடியாத இழப்புகளும், சொல்லொணாத் துயரங்களையும் ஏற்படுத்தினர் என்று அந்த உரையில் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தப் போர் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது

போர் காலத்தில் சைகான் என்றும் இப்போது ஹோ சி மின் சிட்டி என்றும் அழைக்கப்படும் நகரில் போர் முடிவுக்கு வந்ததைக் குறிக்கும் நாற்பதாம் ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

Image caption கடுமையாக நடைபெற்ற போரில் தோல்வியடைந்து வெளியேறியது

கம்யூனிஸ்ட் துருப்புக்கள் சைகான் நகரை 1975ஆம் ஆண்டு கைப்பற்றியதை அடுத்து போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இப்போது அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, பரந்துபட்ட பல துறைகளில் ஒத்துழைப்பும் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வியட்நாம் போர் ஒரு பார்வை

1954- வியட்நாமை வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கும் ஒப்பந்தம் ஜெனீவாவில் கையெழுத்தானது. இதையடுத்து கம்யூனிஸ வடக்கு, தென் பகுதியில் அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவு அளித்தது.

1964- வடக்கு வியட்நாமிலுள்ள இலக்குகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சுகளை நடத்தியது.

1965- அமெரிக்காவிலிருந்து இராணுவத்தினர் வியட்நாமை வந்தடைந்தனர்

1973- "போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை மீண்டும் ஏற்படுத்தும்" ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்தாகிறது. இதையடுத்து வடக்கு தெற்கு வியட்நாமில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு முடிவுக்கு வருகிறது. எனினும் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையே போர் தொடருகிறது.

30 ஏப்ரல் 1975- வடக்கு வியட்நாம் துருப்புக்கள் கம்யூனிஸ்ட் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு வியட்நாமிலுள்ள சைகான் நகருக்குள் நுழைந்து நகரைக் கைப்பற்றுகிறது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்து நாடு மீண்டும் இணைக்கப்படுகிறது