குரங்குக் குட்டிக்கு வேறு பெயர் தேடப்படுகிறது

ஜப்பானிய மிருகக்காட்சிசாலை ஒன்றில் புதிதாக பிறந்த ஒரு குரங்குக் குட்டிக்கு வைக்க திட்டமிடப்பட்டிருந்த ''சார்லட்'' என்ற பெயர், பிரிட்டனின் புதிதாக பிறந்த இளவரசிக்கு அவமரியாதையாக அமைந்துவிடும் என்ற முறைப்பாடுகளால், வேறு பெயரை அந்த மிருகக்காட்சிசாலை தேடுகிறது.

Image caption குரங்குக் குட்டிக்கு வேறு பெயர் தேடப்படுகிறது

ஒவ்வொரு வருடமும் முதலில் பிறக்கும் குரங்குக் குட்டிக்கு பெயரை தெரிவு செய்ய பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும் பாரம்பரியத்தை தகசாகி மிருகக்காட்சிசாலை கொண்டிருக்கிறது.

ஆனால், சனிக்கிழமையன்று பிரிட்டனில் சார்லட் இளவரசி பிறந்ததை அடுத்து, பலர் அந்தப் பெயரையே வைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

ஆனால், ஜப்பானிய அரச குடும்பத்தில் பிறக்கும் குழந்தையின் பெயரை பிரிட்டனில் பிறக்கும் ஒரு குரங்குக் குட்டிக்கு வைத்தால் மக்கள் எப்படி வருந்துவார்கள் என்று சுட்டிக்காட்டி, முறைப்பாடுகள் வந்ததால், அதனை மாற்ற ஜப்பானிய மிருகக்காட்சிசாலை யோசித்துவருகிறது.