சிவப்புக் கட்டெறும்பு சாதிப்பது எப்படி?

  • 7 மே 2015

உலகளவில் மிகவும் வேகமாக ஊடுறுவும் எறும்பு வகையொன்று, எப்படி அதைச் செய்கிறது என்பது குறித்த உண்மை இப்போது வெளியாகியுள்ளது.

Image caption இருக்கும் இடத்துக்கு ஏற்றவகையில் செயல்படும் வல்லமை கொண்டவை இந்த சிவப்புக் கட்டெறும்புகள்

அப்படியான அந்தச் சிவப்புச் கட்டெறும்புகள் எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும் உட்புகுந்து, தமது கூடுகளைக் கட்டும் உத்திகளை வகுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவை என்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டெறிந்துள்ளனர்.

இதற்காக அவர்கள் அந்தக் கட்டெறும்புகள் நிலத்துக்கு கீழே அமைத்துள்ள பாதைகளை எக்ஸ்-ரே கதிர்களைக் கொண்டு படம்பிடித்தனர்.

அதில் அவை பெருமணற் துளிகளில் வேகமாக பணியாற்றுவது கண்டறியப்பட்டது.

படத்தின் காப்புரிமை laura danielle wanger
Image caption இந்த எறும்புகள் குறித்த ஆய்வு புதிய வகையான இயந்திர மனிதனை உருவாக்க உதவும் என நம்பிக்கை

நுண்மணற் துளிகளில் அவை எப்படி செயல்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, அவை அந்த மணற்துளிகளை முதலில் இறுக்கி, கையாளக் கூடிய வகையில் பெரிய அளவிலான கட்டிகளாக மாற்றி தமது தொழில் உத்திகளை வடிவமைத்து முன்னேறி வருவது தெரிய வந்தது.

இதன்மூலம் எப்பேற்பட்ட நிலப்பரப்பிலும் அந்தச் சிவப்புக் கட்டெறும்புகளால் வாழ முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஸ்திரமற்ற சுற்றுச்சூழலில் எறும்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதன் மூலம், மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தக் கூடிய வகையிலான இயந்திர மனிதர்களை வடிவமைப்பதில் உதவக் கூடும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.