தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக்கூடும் என்கிறார் கியூபத் தலைவர்

அமெரிக்க-கியூப உறவு: போப்புக்கு நன்றி சொன்னார் ரவுல் கேஸ்ட்ரோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அமெரிக்க-கியூப உறவு: போப்புக்கு நன்றி சொன்னார் ரவுல் கேஸ்ட்ரோ

வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்த கியூபத் தலைவர் ரவுல் கேஸ்ட்ரோ தான் கத்தோலிக்க மதத்திற்கு திரும்பக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ரவுல் கேஸ்ட்ரோவும் அவரது சகோதரர் ஃபிடல் கேஸ்ட்ரோவும் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்ட கத்தோலிக்கர்கள் என்றாலும் கியுபாவில் அவர்களது கம்மியூனிசிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபைகளின் செயற்பாடுகளை நிறுத்தியிருந்தார்கள்.

சுமார் ஐம்பது நிமிடம் போப் ஆண்டகையை சந்தித்து பேசியிருந்த ரவுல் கேஸ்ட்ரோ, கத்தோலிக்க மதத் தலைவரின் ஞானமும் பணிவும் தம்மை வெகுவாக ஈர்த்து விட்டதென்றும் செப்டெம்பரில் அவர் கியூபா வரும்போது நடைபெறவுள்ள ஆராதனையில் தான் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக கசந்திருந்த அமெரிக்க-கியூப உறவை சீராக்க பாப்பரசர் ஆற்றிய பெரும் பங்கிற்கு ரவுல் கேஸ்ட்ரோ நன்றி தெரிவித்தார்.