ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

26 ஆண்டுகள் கடந்து தியானன்மென் சதுக்க நினைவேந்தல்

பீஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் போராட்டங்களை நசுக்க சீனா தனது இராணுவ வல்லமையை பயன்படுத்தி 26 ஆண்டுகள் கடந்துள்ளன.

சீனாவின் கேலண்டரில் அரசியல் முக்கியத்துவம் மிக்கதாக அந்த நாள் மாறிவிட்டது.

ஆறு -நான்கு என்ற இலக்கங்களுடன் மறைமுகமாக தியானன்மென் பற்றி நினைவுகூரப்பட்ட குறிப்புகள் கூட, சீன பெருநிலப்பரப்பில் இணையதளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.