டெல் அப்யாத் நகரைக் குர்தியப் படைகள் கைப்பற்றின - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்லாமிய அரசு படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட டெல் அப்யாத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக குர்திஸ் துருப்புகள் தெரிவித்துள்ளன.

சிரியாவின் வடக்கேயுள்ள டெல் அப்யாத் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது.

அப்பகுதியில் பல கார் குண்டுகளும் இஸ்லாமிய அரசு போராளிகளின் சடலங்களும் வீதிகளில் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாக தளபதியொருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கோட்டையான ரக்கா மாகாணத்திற்கான நுழைவாயிலாக இந்நகரம் பார்க்கப்படுகிறது.

டெல் அப்யாத் நகரைக் கைப்பற்றியதன் மூலம் துருக்கிய எல்லையை ஒட்டிய நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பிரதேசம் குர்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

அரபு மற்றும் துர்கோமான் குழுக்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் இனஅழிப்பில் ஈடுபடுவதாக, துருக்கிய அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவான் குற்றம்சாட்டியிருக்கிறார். எனினும் இந்த குற்றச்சாட்டை குர்தியர்கள் மறுத்துள்ளனர்.

குர்தியப் போராளிகளைத் தீவிரவாதிகளுக்கு நிகரானவர்களாக துருக்கிய அதிபர் கருதுகிறார்.