நாஹசாக்கி ஞாபகார்த்த நிகழ்வுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாகசாகி ஞாபகார்த்த நிகழ்வுகள் - காணொளி

அமெரிக்க படையினால் சரியாக 70 வருடங்களுக்கு முன்னதாக அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நாகசாகியில் இன்று உணர்வுபூர்வமான ஞாபகார்த்த வழிபாடுகள் நடந்தன.

அந்த நிகழ்வுகளின் போது அந்த குண்டு தாக்குதலை நேரடியாக பார்த்து, உயிர் பிழைத்த ஒருவரும், நாகசாகி மேயரும் தற்போதைய ஜப்பானிய அரசாங்கத்தின் ''இராணுவத்தின் பணிகள் என்ன என்பது தொடர்பிலான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான'' திட்டத்தை விமர்சித்தனர்.

அந்த விமர்சனத்தை அவர்கள் முன்வைத்தபோது, அங்கிருந்தவர்கள் அதனை கரவோசை செய்து வரவேற்றனர்.

அந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை முன்னெடுக்கும் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபே அப்போது அமைதியாக அமர்ந்திருந்தார்.

இந்தக் குண்டுவெடித்தபோதும், கதிரியக்கத்தினாலும் 70,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

ஹிரோஷிமாவில் உலகிலேயே முதலாவது அணுக்குண்டு தாக்குதல் நடந்து மூன்றாவது தினத்தில் இந்த தாக்குதலை அமெரிக்க படைகள் நடத்தின.

அமெரிக்க படைகள் இந்த தாக்குதலுக்காக ''கொக்குரா'' என்ற இடத்தையே இலக்கு வைத்திருந்தபோதிலும், அந்த இடத்தின் மீதாக மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நாகசாகி தாக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வுகள் குறித்த பிபிசியின் சிறிய காணொளி.