வங்கதேச வலைபதிவர்கள் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

வங்கதேசத்தில் இரண்டு முன்னணி வலைபதிவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் உட்பட மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Focus Bangla
Image caption வலைபதிவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து வங்கதேசத்தில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவரான சாதிக் அலி இந்தக் கொலைகளைத் திட்டமிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட இரு வலைபதிவர்களுமே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர்.

சாதிக் அலி வங்கதேசத்தில் தடைசெய்யப்பட்ட அன்சாருல்லா பங்களா டீம் என்ற தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டுவந்தார்.

இந்தக் கொலைதொடர்பாக மேலும் இரண்டு பேர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த சில மாதங்களில் வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைபதிவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.