சாலையோரத்திலே வீடற்றவர்கள் - இது லாஸ் ஏஞ்சலஸ் பிரச்சனை

  • 23 செப்டம்பர் 2015

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரம், அங்கு நிலவும் வீடற்றவர்கள் பிரச்சனையை பொது அவசரநிலையாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை GETTY
Image caption சாலையோரத்திலே வீடற்றவர்கள்... லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அதிகரிப்பு

இந்தப் பிரச்சனையை சமாளிக்க 100 மிலியன் டாலர்கள் ஒதுக்குவதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுமார் 26,000 பேர் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தெருவோரங்களில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இது இரண்டாண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட 10 சதவீதம் அதிகம்.

அதிக வாடகை, குறைந்த ஊதியம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவைதான் இந்த நிலைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரம் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த விரும்புகிறது.

இந்த நிலையில், நகரத்தை பல தசாப்தங்களாக பீடித்துள்ள இந்த வீடற்றவர்கள் பிரச்சனை உடனடியாக சமாளிக்கப்படவேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.