புரூண்டி மதுச்சாலையில் 7 பேர் சுட்டுக்கொலை

  • 8 நவம்பர் 2015

புரூண்டியின் தலைநகர் புஜும்புராவில் மதுச்சாலை ஒன்றில் ஒரு ஆயுததாரி 7 பேரைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption புரூண்டி படுகொலை (கோப்புப் படம்)

அவர்களை சுடுவதற்கு முன்னதாக அவர்களை நிலத்தில் குப்புறப் படுக்க வைத்ததாக கூறி இதனை ஒரு படுகொலை என்று நகர மேஜர் விபரித்துள்ளார்.

பொடுமக்கள் தமது ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் அல்லது கடுமையான போலிஸ் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று கூறி அரசாங்கம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மூன்றாவது பதவிக்காலத்துக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிபர் குருன்ஸிஸா சர்ச்சைக்குரிய வகையில் அறிவித்ததால் தூண்டப்பட்டு நடக்கும் கொலைகளின் ஒரு பகுதியாக புரூண்டியில் கடந்த வாரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.