ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிஞ்சாரில் '80 யசீதி பெண்களின் உடல்களுடன்' மனிதப் புதைகுழி

  • 16 நவம்பர் 2015

பாரிஸ் நகரில் ஐஎஸ் நடத்தியுள்ள தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், வடக்கு இராக்கில் அந்தக் குழுவினர் புரிந்துள்ள அட்டூழியங்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமிய அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட சிஞ்சார் நகருக்கு அருகே, கிட்டத்தட்ட 80 பெண்களின் உடல் எச்சங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்ற பெரும் மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில், சிறுபான்மை யசீதி சமூகத்தினருக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நடந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.