ஐ எஸ் ஆயுததாரிகளின் கோட்டையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை

இஸ்லாமிய அரசு என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் ஆயுதக் குழுவின் தலைநகரம் என்று சொல்லப்படுகின்ற சிரியாவிலுள்ள ரக்காவைச் சேர்ந்தவர் இளம் தாய் நூர்.

சில வாரங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பித்த அவரும் அவர் குடும்பமும், தற்போது ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரக்காவில் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பிபிசியின் 100 பெண்கள் தொடருக்காக அவர் விளக்கினார்.

பாதுகாப்புக் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ள நூரின் கதை இது.