பிரிட்டனில் மறைந்துவரும் பொது சலவைக் கடைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் மறைந்துவரும் பொது சலவைக் கடைகள்

துணிகளைத் துவைக்கும் முறை மாறி வருகிறது.

பிரிட்டனில் இப்போது சலவை இயந்திரங்கள் மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்டன.

ஏறக்குறைய வீட்டுக்கு வீடு சலவை இயந்திரங்கள் வந்துவிட்டன.

பலருக்கு அவை சொகுசானவை. அத்தியாவசியமானவை.

ஆனால் சிலருக்கு அவை வசதிப்படாது. அப்படிப்பட்டவர்களுக்கானவை பொதுசலவைக்கடைகள்.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான பொதுச் சலவைக் கடைகள் பிரிட்டனின் பல பகுதிகளில் இருந்தன.

ஆனால் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆனாலும் அவை சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கமாக இன்றும் சிலரால் பார்க்கபடுகின்றன.