மாதேசி போராட்டம் வாபஸ்; நேபாளத்தில் எரிபொருள் ரேஷன் முறை முடிவுக்கு வந்தது

நேபாளத்தில் புதிய அரசியல் சட்டத்துக்கு எதிராக எல்லைப்பகுதியில் மாதேசி இன மக்கள் நடத்திய மறியல் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஐந்து மாதங்களில் முதன் முறையாக நாட்டில் எரிபொருள் ரேஷன் முறையில் வழங்குவதை நிறுத்துவதாக நேபாள அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Image caption எரிபொருள் தட்டுப்பாட்டில் சிரமப்பட்ட மக்கள்

பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பது இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டதுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக நேபாள அரசுக்கு சொந்தமான நேபாள் எண்ணெய் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால், அண்டை நாடான இந்தியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் வருவது தடைப்பட்டத்தை அடுத்து நேபாளம் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

படத்தின் காப்புரிமை PIB
Image caption இந்தியாவுக்கு வந்திருக்கும் நேபாளப் பிரதமர் ஒளி

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு அதிகாரபூர்வமற்ற தடையை இந்தியா அமல்படுத்தியதாக நேபாளம் இந்தியா மீது குற்றம் சுமத்தியது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

நேபாளப் பிரதமர் காட்கா பிரசாத் ஒளி தற்போது இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கிறார். இரு தரப்புகளும் தங்கள் நாடுகளுக்கிடையே நிலவிய தவறான புரிதல்களை தெளிவாக்கிக்கொண்டதாகக் கூறியுள்ளன.