ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள்

  • 15 மார்ச் 2016

ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.